சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பாலகங்கா, விருகை ரவி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயரையும், விலாசம் மாறியவர்களின் பெயரையும் நீக்குங்கள் என்று நாங்கள் பல காலமாக தேர்தல் கமிஷனிடம் கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இறந்தவர்களின் வாக்குகளை நீக்குவதுடன், வாக்குரிமை இல்லாமல் இருப்பவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பதுதான் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கம். நம் நாட்டில் நிறைய பேருக்கு வாக்குகள் இல்லை. ஆனால் இறந்தவர்களுக்கும் விலாசத்தில் இருந்து மாறியவர்களுக்கும் வாக்குகள் உள்ளன. துப்புரவு பணியாளர்களையும், எழுதப் படிக்க தெரியாதவர்களையும் பி.எல்.ஓவாக போட்டிருக்கிறார் மாநகர ஆணையர். அவர்களுக்கு படிவத்தை நிரப்ப தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
+
Advertisement


