தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்: முதலமைச்சர் பதிவு
சென்னை: “தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என தி.க சார்பில் நேற்று நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் பங்கேற்றதை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.