தமிழகத்தில் மீண்டும் போர்டு நிறுவனம் முதல்வர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் போது போர்டு நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தவகையில் முதல்வரின் அழைப்பை ஏற்று போர்டு நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் கார் இன்ஜின் உற்பத்தியை தொடங்கும் நிகழ்வாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு ரூ.3250 கோடி போர்டு நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதனால் புதிதாக 600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 2.35 லட்சம் புதிய இன்ஜின்களை முதற்கட்டமாக உற்பத்தி செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
