புதுடெல்லி: தமிழ்நாட்டில் கோயில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,‘‘ஆகம கோயில்களைக் கண்டறிய முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி, அறநிலையத்துறை தலைவர், குன்றக்குடி அடிகளார், பொம்மபுரம் ஆதீனம் (மயிலம்) சி.சிவஞான பாலைய சுவாமிகள் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு 3 மாதத்தில் ஆகம விதிகள் மற்றும் ஆகம விதிகள் இல்லாத கோயிலை கண்டறிந்து அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். இதையடுத்து அதனை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
+
Advertisement