தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்காத நிலையில் தமிழ்நாட்டில் S.I.R. பணிகளை மேற்கொள்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான வழக்கில் இதுவரை இறுதி உத்தரவு பிறப்பிக்கவில்லை.
