பயிற்சிகள் விவரம்:
1. கிராஜூவேட் இன்ஜினியரிங் அப்ரன்டிஸ்கள்: மொத்த இடங்கள்-458
i) மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்: 399 இடங்கள்: விழுப்புரம் மண்டலம்- 70 இடங்கள், கும்பகோணம்-72, சேலம்-45, மதுரை-18, நெல்லை-66, எம்டிசி- சென்னை-98, எஸ்இடிசி- 30.
ii) சிவில் இன்ஜினியரிங்: 28 இடங்கள்: விழுப்புரம் மண்டலம்-9, எம்டிசி- சென்னை-19.
iii) எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்: 20 இடங்கள். விழுப்புரம் மண்டலம்-9, சேலம் மண்டலம்-3, மதுரை மண்டலம்-2, எம்டிசி-சென்னை-6.
iv) கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் டெக்னாலஜி: 12 இடங்கள். விழுப்புரம் மண்டலம்-12.உதவித் தொகை ரூ.9,000.
2. கிராஜூவேட் அப்ரன்டிஸ் ( இன்ஜினியரிங் அல்லாத)- (பிஏ.,பிஎஸ்சி., பி.காம்., பிபிஏ., பிபிஎம்., பிசிஏ) மொத்த இடங்கள்: 569. விழுப்புரம் மண்டலம்-90, கும்பகோணம்-300, மதுரை-37, நெல்லை-93, எம்டிசி- சென்னை-19, எஸ்இடிசி- 30.உதவித் தொகை ரூ.9,000.
3. டிப்ளமோ இன்ஜினியரிங் அப்ரன்டிஸ்கள்: மொத்த இடங்கள்: 561.
i) மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்: 505 இடங்கள். விழுப்புரம் மண்டலம்-26, கும்பகோணம் மண்டலம்-136, சேலம்-45, மதுரை-48, நெல்லை-22, எம்டிசி- சென்னை-198, எஸ்இடிசி-30.
ii) சிவில் இன்ஜினியரிங்: 24 இடங்கள். விழுப்புரம் மண்டலம்-4, எம்டிசி-சென்னை-20.
iii) எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்: 25 இடங்கள். விழுப்புரம் மண்டலம்- 3, மதுரை-3, எம்டிசி-சென்னை-19 இடங்கள்.
iv) கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி: 7 இடங்கள். விழுப்புரம் மண்டலம்-7.
உதவித் தொகை ரூ.8000.
தகுதி: அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகளில் கிராஜூவேட் அப்ரன்டிஸ் இன்ஜினியரிங் பயிற்சிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டமும், கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங் அல்லாத) பயிற்சிக்கு பிஏ/பிஎஸ்சி/பி.காம்.,/பிபிஏ பட்டமும், டிப்ளமோ அப்ரன்டிஸ் பயிற்சிக்கு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். 2021,2022,2023,2024,2025ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
டிப்ளமோ படிப்பு, பி.இ., மற்றும் பட்டப்படிப்பு பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் அக்.29ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். நவம்பர் 2வது வாரம் நேர்முகத் தேர்வு தொடங்கும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த இணையதளத்தால் வழங்கப்படும் யுனிக்யூ என்ரோல்மென்ட் எண்ணை பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் டாப் டவுன் பட்டனை கிளிக் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.10.2025.