சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் 2021-22 ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை சுற்றுலாத்தொழில் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. இந்த விருதுகள் சுற்றுலாத்தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளைச் செயற்படுத்தும் சுற்றுலாத்தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள். உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்
Best Inbound Tour operator, Best Domestic Tour operator, Best Travel partner, Best Airline partner
Best Accommodation, Best Restaurant, Tamil Nadu Tourism Development corporation star performer, Best Niche Tourism Operator, Best Adventure Tourism and Camping site Operator
Best Meetings Incentives Conference and Exhibition (MICE) Organizer, Best Social Media influencer, Best Tourist Guide, Best Advertisement on Tamil Nadu, Best Tourism Promotion Publicity Material, Best Educational Institution for Tourism and Hospitality
மேற்கண்ட விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விருதுகள் சென்னையில் வழங்கப்படும் அதற்கான இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.09.2025 ஆகும். எனவே. சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் தெரிவித்துள்ளார்