பரப்புரை, ரோடு ஷோவுக்கு நெறிமுறைகள் வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நவ.6ம் தேதி நடைபெறும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!
சென்னை : பரப்புரை, ரோடு ஷோ கூட்டங்களை கட்டுப்படுத்த நெறிமுறைகள் வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நவ.6ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
