Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்

டெல்லி : நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று மத்திய அரசு ஆய்வறிக்கை வெளியீடு செய்துள்ளது. அதில், "பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவை விட தமிழ்நாடு அதிகப்பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது; 2023-24 ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் தொடர்பான ஆய்வறிக்கையில், உற்பத்தித் துறையில் நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் அதிகப்படியாக 15% தமிழ்நாடு வழங்கியுள்ளது,"இவ்வாறு ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.