சென்னையில் உள்ள எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தில் காலியாக உள்ள இளநிலை புத்தகம் கட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை புத்தகம் கட்டுநர். 5 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1). வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 18 லிருந்து 37க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பைண்டர் பிரிவில் டிரேடு சான்றிதழ் அல்லது பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.