சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மொத்தம் 68,000 வாக்குச்சாவாடிகள் இருந்தன. இதனை அடுத்து ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி வாக்குச்சாவடிகளை மறுசீறமைப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி தமிழகத்தில் வாக்குச்சாவடி பணிகளானது மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 6,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகள் பட்டியல் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தயார் நிலையில் உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடம் வாக்குச்சாவடிகளின் பட்டியலை கொடுத்து கருத்து கேட்க்கப்படும். இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு இந்த பட்டியல் தேர்தல் ஆணையத்திற்க்கு அனுப்பிவைக்கப்பட்டு இறுதிசெய்யப்படும்.
இதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் 74,000 வாக்குச்சாவடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.