மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தவாக தலைவர் வேல்முருகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் வட இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2014-ல் பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இது திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டு வருகிறது. 2026 தேர்தலில் தமிழகத்தை தாயகமாக கொள்ளாத வட இந்தியர்கள் சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கும் சூழல் இருக்கிறது.
2014க்கு பிறகு திட்டமிட்டு தமிழகத்தில் குடியேற்றப்பட்டவர்கள் வாக்களிக்க கூடாது. பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் 6 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களை தமிழகத்தில் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட உள்ளனர். குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் பாஜ என்கிற மனிதகுல விரோத கட்சியில் இருப்பவர். தமிழராக இருக்கிறார் என்பதற்காக அவரை ஆதரிக்க முடியாது. இவ்வாறு கூறினார்.