சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமாக உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 46 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை எண்ணூர், செங்கல்பட்டில் தலா 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை சேத்துப்பட்டு 13 செ.மீ., திருமயம், சென்னை விம்கோநகர், தாமரைப் பாக்கத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
+
Advertisement

