தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 7 செ.மீ. மழை பதிவு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 6 செ.மீ. மழையும், நெல்லை ஊத்து மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கலாறில் தலா 5 செ.மீ மழையும் காக்காச்சி, சிறுவாணி அடிவாரம், ஊத்துக்கோட்டை, விரிஞ்சிபுரம், மாஞ்சோலை, நீலகிரி மாவட்டம் கூடலூரில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
