சென்னை: தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 97ஆவது வாரியக் கூட்டம் தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை 5ஆவது தளத்திலுள்ள கூட்டரங்கில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் டி.என்.வெங்கடேசன், இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் சுஞ்சோங்கம் ஜடக் சிரு இ.ஆ.ப., பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப., தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறையின் முதன்மைச் செயலாளர் வி.அருண் ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (SIPCOT) மேலாண்மை இயக்குநர் டாக்டர் K.செந்தில்ராஜ் இ.ஆ.ப., நிதித்துறை இணைச் செயலாளர் ராஜகோபால் சுங்கரா இ.ஆ.ப., கடல்வாணிபத்துறை அலுவலர் டாக்டர் என்.சுப்பையன் இ.ஆப., மாநில துறைமுக அலுவலர் கேப்டன் எம்.அன்பரசன், தமிழ்நாடு & புதுச்சேரி கடற்படை உயர் அதிகாரி கமாண்டர் சவராட் மாஹோன், மாவட்ட கடலோர காவல் டி.ஐ.ஜி. B.முருகன் (TN Coast Guard), சுங்கத்துறை கண்காணிப்பாளர் சி.ஆர்.சுப்பராவ், MMD., மீன்வளத்துறை ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர்.