பணி: உதவியாளர்/உதவி பிரிவு அலுவலர் (Assistant & Assistant Section Officer). மொத்த காலியிடங்கள்: 32.
பணியிடங்கள் விவரம்:
1. உதவி பிரிவு அலுவலர்: தலைமை செயலகம் (சட்டம் மற்றும் நிதித் துறைகள் தவிர). 22 இடங்கள் (பொது-7, பிற்பட்டோர்-6, முஸ்லிம்-1, மிகவும் பிற்பட்டோர்-4, எஸ்சி-3, அருந்ததியர்-1,).
2. உதவி பிரிவு அலுவலர் (நிதி): 3 இடங்கள். (பொது-1, பிற்பட்டோர்-1, முஸ்லிம்-1)
3. உதவியாளர்: தலைமை செயலகம் (சட்டம் மற்றும் நிதித்துறைகள் தவிர). 5 இடங்கள். (பொது-2, முஸ்லிம்-1, மிகவும் பிற்பட்டோர்-1, எஸ்சி-1).
4. உதவியாளர்: (நிதி)- 2 இடங்கள். (பொது-1, முஸ்லிம்-1).
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி உதவியாளர் பணிக்கு 30க்குள்ளும், உதவி பிரிவு அலுவலர் பணிக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம் பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: உதவியாளர் (அசிஸ்டென்ட்) பணிக்கு ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். உதவி பிரிவு அலுவலர் (அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர்) பணிக்கு பி.காம் அல்லது ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் குறைந்தது 5 ஆண்டுகள் இளநிலை உதவியாளர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
பொது அறிவு கேள்விகளைக் கொண்ட எழுத்துத் தேர்வு, தமிழ் மொழி திறனறியும் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். டிசம்பர் 21ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.11.2025.
 
  
  
  
   
