பணி: அசிஸ்டென்ட் சர்ஜன்.
மொத்த இடங்கள்: 1100 (பொது-320, பிற்பட்டோர்-278, முஸ்லிம்-35, எம்பிசி-212, எஸ்சி-174, அருந்ததியர்-33, எஸ்டி-48).
சம்பளம்: ரூ.56,100- 2,05,700. தகுதி: எம்பிபிஎஸ் படித்து இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது: 01.07.2025 தேதியின்படி 18 லிருந்து 37க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர்களில் மாற்றுத்திறனாளிகள் 47 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/பிற்பட்டோர்/முஸ்லிம்/மிகவும் பிற்பட்டோர்/சீர் மரபினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்: பொது மற்றும் பிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் தமிழ் ெமாழி திறனை பரிசோதிக்கும் வகையில் மற்றும் எம்பிபிஎஸ் படிப்பில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். தமிழ் மொழி திறனறி தேர்வில் 50 மதிப்பெண்களுக்கும், எம்பிபிஎஸ் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.
www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை 11.12.2025.


