தமிழ்நாட்டை ஃபாக்ஸ்கான் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி; இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டை ஃபாக்ஸ்கான் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி; இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்வது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஃபாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு செய்து 14,000 திறமையான வேலைகளை உருவாக்க உள்ளது. இது மாநிலத்தின் மின்னணுவியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
முதல்வரின் சமூக வலைதளப்பதிவில்:
தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து எங்களுடன் எதிர்காலத்தை வடிவமைத்த ஃபாக்ஸ்கானுக்கு நன்றி. இதுதான் திராவிட மாடல் அரசின் நடவடிக்கை. தமிழ்நாட்டை தெற்காசியாவின் உற்பத்தி மற்றும் புதுமை மையமாக மாற்றுவதற்கான எங்கள் பயணத்தில் இது மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது என கூறியுள்ளார்.