தமிழகத்தில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகள் மேம்பாடு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு; அரசு திட்டம்
சென்னை: தமிழகத்தில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட கலைஞர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971ஆம் ஆண்டு உருவாக்கினார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அமராவதி, ஆழியாறு, பவானிசாகர், மேட்டூர், வைகை அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.