Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள்

பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், பயோ கெமிஸ்டிரி, பயாலஜிக்கல் சயின்ஸ் (கல்வி), பயோ டெக்னாலஜி, தாவரவியல், பிளான்ட் பயாலஜி மற்றும் பிளான்ட் பயோ டெக்னாலஜி, வேதியியல், வணிகவியல், வணிகவியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), வணிகவியல் (இ. காமர்ஸ்), வணிகவியல் (சர்வதேச வணிகம்), வணிகவியல் (கூட்டுறவு), வணிகவியல் (கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப்), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், டிபென்ஸ் ஸ்டடீஸ், பொருளியல், கல்வி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், ஆங்கிலம், என்விரோன்மென்டல் சயின்ஸ், உணவு மற்றும் சத்துணவியல், உணவு அறிவியல் மற்றும் சத்துணவியல், உணவு சேவை மேலாண்மை மற்றும் டயட்டிக்ஸ், ஹோம் சயின்ஸ், நியூட்ரிஷன் மற்றும் டயட்டிக்ஸ், புவியியல், நிலத்தியல், இந்தி, ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ், வரலாறு, வரலாறு (கல்வி), மனிதவள மேம்பாடு, மனித உரிமைகள், இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், இதழியல் மற்றும் மக்கள் தகவலியல், மலையாளம், மரைன் பயாலஜி, கணிதம், மைக்ரோ பயாலஜி, இந்தியன் மியூசிக், உடல் அறிவியல் (கல்வி), இயற்பியல், அரசியல் அறிவியல், உளவியல், பொது நிர்வாகம், சம்ஸ்கிருதம், சமூக வேலை, சமூகவியல், புள்ளியியல், தமிழ், தெலுங்கு, சுற்றுலா மற்றும் சுற்றுலா மேலாண்மை, உருது, விஷூவல் கம்யூனிகேசன், வன உயிரியல், விலங்கியல், பேஷன் டெக்னாலஜி, கணிதம் (கல்வி).

சம்பளம்: ரூ.57,700- ரூ.1,82,400.

வயது: 01.07.2025 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள ஏதாவது ஒரு பாடப்பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (எஸ்சி/எஸ்டியினருக்கு 50%).

சம்பந்தப்பட்ட பாடத்தில் நெட்/செட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது யுஜிசி விதிமுறைப்படி பி. ஹெச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, முதுநிலை பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள், ஆசிரியர் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வில் உதவி பேராசிரியர் பணிக்குரிய முக்கிய பாடப்பிரிவு, தமிழ் மொழித்திறன் தேர்வு மற்றும் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு டிச.20ம் தேதி நடைபெறும்.

கட்டணம்: எஸ்சி/எஸ்டி/ அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதர பிரிவினருக்கு ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.