தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையில் காலியாக சிறப்பு நிபுணர் (ஸ்பெஷலிஸ்ட்) பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. ‘ஸ்பெஷலிஸ்ட்’
i) கம்யூனிகேசன், பப்ளிக் அவர்னெஸ் மற்றும் கேப்பாசிட்டி பில்டிங். தகுதி: கம்யூனிகேசன் மற்றும் ஜர்னலிசம் பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) டேட்டா மானிட்டரிங் மற்றும் டாக்குமென்டேஷன்: தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், டேட்டா சயின்ஸ், கணிதம் ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iii) சாலை பாதுகாப்பு: தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: ரூ.1,50,000.
2. அசிஸ்டென்ட்: சம்பளம்- ரூ.50,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: சம்பளம்: ரூ.40,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.tn.gov.in/jobopportunity என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து tnrsmu2025@gmail.com என்ற இ.மெயிலுக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை இ.மெயிலில் அனுப்ப கடைசி நாள்: நாளை(25.09.2025.)