Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாப்பூர் பகுதியில் காலில் காயத்தால் ஊன்றுகோலுடன் தமிழச்சி தங்கபாண்டியன் பிரசாரம்

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மயிலாப்பூர் பகுதியில் நேற்று 2வது நாள் பிரசாரத்தில் ஈடுபட்டார். காலில் எலும்பு முறிவை பொருட்படுத்தாமல் ஊன்று ேகாலுடன், நேற்று காலை 8 மணி முதல் மயிலாப்பூர் கிழக்கு பகுதியில் தொடங்கி மாதவ நகர் ஆர்.கே.நகர், வள்ளீஸ்வரர் தோட்டம், கட்டபொம்மன் தெரு, காமராஜர் சாலை, சீனிவாச அவென்யூ, ராஜா முத்தையாபுரம், குட்டிகிராமணி தெரு, கபாலி வனபோஜன தோட்டம், நாராயணசாமி தோட்டம் 2வது சாலை,

அதனை தொடர்ந்து 171வது வட்டத்திற்கு உட்பட்ட எஸ்.கே.பி.புரம், அன்னை தெராசா நகர், அன்னை சத்தியா நகர், கிரீன்வேஸ் ரோடு, ஆர்.கே.மடம் சாலை, ராஜா தெரு, ராஜா கிராமணி தோட்டம், காவலர் குடியிருப்பு, சீனிவாசபுரம், 126வது வட்டத்திற்கு உட்பட்ட பவானிகுப்பம் பகுதி, நம்பிக்கை நகர், ராஜிவ்காந்தி நகர், மல்லை மாநகர், 121 வட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை, மாலை என இருவேளையும் சென்று வாக்கு சேகரித்தார்.

அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவியும், ஆங்காங்கே ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். திறந்த வாகனத்தில் வாக்கு சேரித்த நிலையில் சில பகுதிகளில் வாகனம் செல்ல முடியாக இடங்களில் இறங்கி சென்று வீடு, வீடாக வாக்கு சேகரித்தார். அந்த பகுதிகளில் வழிநெடுகிலும் மலர் மாலைகளை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதில் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும், கட்சியின் உறுப்பினர்களும் வாக்கு சேகரித்தனர்.

அப்போது, தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது: வேட்பாளர் பணிமனை திறக்கும்போது தடுமாறி கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 3 வாரம் ஓய்வெடுக்க சொல்லி இருந்தார்கள். ஆனாலும் தேர்தல் நேரம் என்பதால் ஓய்வு எடுக்காமல் பிரசார பணிகளை தொடங்கி இருக்கிறோம். தமிழ்நாட்டில் ‘இன்விஷிபில்’ ஆளுநராக இருந்த தமிழிசை திடீரென வந்து உங்கள் அக்காவாக இருக்கிறேன் என சொல்கிறார்.

இந்த தொகுதி மக்களுக்கு என்ன செய்து இருக்கிறேன் என்பதை சமூக வலைதளங்களில் கடந்த 5 ஆண்டுகளாக பதிவு செய்து உள்ளேன். இந்த தொகுதியில் பெரும்பாலான பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் தீர்க்கப்படாமல் உள்ள சிறு பிரச்னைகளை மக்கள் தெரிவிக்கின்றனர். அவையும் சரிசெய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். வாக்கு சேகரிக்கும் போது மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, கூட்டணி கட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரியை தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மயிலை வேலு எம்எல்ஏ, மனிதநேய ஜனநாயக கட்சி தென் சென்னை மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர், திமுக கிழக்கு பகுதி செயலாளர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தார்.