திருச்சி: அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் திருவாதிரை நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்று பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, இன்று நம்மிடத்தில் நின்று கொண்டிருக்கிறார். சோழர்களுடைய ஆட்சியினுடைய பெருமை செங்கோல். அந்த செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவி நமக்கெல்லாம் பெருமை சேர்த்தது நமது பிரதமர் நரேந்திர மோடி.
அதே போல உலகம் முழுவதும் திருவள்ளுவரை, திருக்குறளை எடுத்து சென்று கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமை சேர்க்கப்பட்டு வருகிறது. இன்று உலகம் முழுவதும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். தமிழர்களின் பெருமை, தமிழ் கலாச்சாரம், தமிழ் இலக்கியங்களை இன்று உலகம் முழுவதும் எடுத்து செல்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.