Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ் கலாச்சார முறையில் திருமணம் கனடா நாட்டு காதலியை மணந்த கோவை வாலிபர்

கோவை: கோவை நவ இந்தியா பகுதியை சேர்ந்த மோகன், பிரேமலதா தம்பதியின் மகன் கௌதம் (30). இவர், கனடாவில் உள்ள கல்லூரியில் தன்னுடன் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியை சேர்ந்த ராபர்ட் டக்ளஸ் பிராட், எலினிட்டா யசன்யா பிராட் தம்பதியின் மகள் சாராவை (30) காதலித்துள்ளார். கடந்த 2019ல் கல்லூரி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்களிடம் இருவரும் காதலிப்பதாக கூறி, திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். மேற்படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்கிறோம் என்று பெற்றோர் கூறியுள்ளனர். பின்னர், கௌதம் பட்ட மேற்படிப்பை முடித்து கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் சாராவும் பணியாற்றினார். இந்நிலையில், மணமகளின் பெற்றோர் தங்களது மகளுக்கு தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று கௌதமின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணமகளின் பெற்றோர், மணமகள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 15 பேர் கோவைக்கு வந்தனர். திருமணத்திற்கு தேவையான பட்டு புடவை மற்றும் பட்டு வேட்டிகளை காஞ்சிபுரத்தில் சென்று எடுத்து வந்தனர். அழைப்பிதழ் அச்சிட்டு மணமகனின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோவை கொடிசியா அரங்கத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து மணமகள் சாராவின் கழுத்தில் மணமகன் கௌதம் மாங்கல்யம் அணிவித்து திருமணம் செய்து கொண்டார். அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.