தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி பிரச்சனை குறித்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நிதி பிரச்சனையில் அக்கறை இருந்தால் அதிமுக எம்.பி.க்கள் குரல் கொடுங்கள். நிதி பிரச்சனை குறித்து ஜி.எஸ்.டி.கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு துரோகத்துக்கும் கொடுமைக்கும் ஆளாகவேண்டும் என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது என தெரிவித்தார்.