சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
+
Advertisement
