சென்னை: தமிழ்நாட்டில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
1.மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக கண்ணன் ஐ.ஏ.எஸ். பணியிட மாற்றம்.
2.கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அம்ரித், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குனராக மாற்றம்
3.சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலராக லீலா அலெக்ஸ் நியமனம் செய்யப்பட்டார்.
4.பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணைய இணை மேலாண்மை இயக்குநராக கவிதா ஐ.ஏ.எஸ். நியமனம்.
5.கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக மு.வீரப்பன் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
6.உயர்கல்வித் துறை துணைச் செயலாளராக ரேவதியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
7.தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இயக்குநராக சி.முத்துக்குமரன் நியமனம்
 
  
  
  
   
