Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாட்டின் கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபு தாபி 2025-க்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கள் தெரிவித்தார்.