சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. Naegleria fowleri என்ற அமீபாவால் ஏற்படும் அரிய மூளை தொற்று, 2025-ல் கேரளாவில் 69 வழக்குகள், 19 இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா போல் பரவாது, ஆனால் குளிர்நீர் அல்லது சூடான நீரில் குளிக்கும்போது மூக்கு வழியாக அமீபா உள்ளே நுழைந்தால் ஏற்படும். இது 95% இறப்பு விகிதம் கொண்டது, ஆனால் ஆரம்ப சிகிச்சை இருந்தால் காப்பாற்றலாம். எனவே, கேரளா சுகாதாரத்துறை, சபரிமலை பாதையில் பம்பையில் நீராடும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
* சபரிமலை சென்று வந்த 3 நாட்களுக்குப் பின் காய்ச்சல், உடல் வலி இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
*ஆறுகள், குளம் போன்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கினுள் நீர் செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்
*மூக்கை இரு விரல்களால் அடைத்தபடி நீராட வேண்டும்.
* கொதிக்கவைத்த நீரை பருகவும்; மலை ஏறும்போது மெதுவாக, இடைவெளி விட்டு ஏறவும்.
*கொரோனா தொற்றுபோல் அமீபா பரவாது என்பதால் சபரிமலை செல்வோர் அச்சப்பட தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
*பக்தர்கள் மருத்துவ பரிசோதனை செய்து, மருந்துகளை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளது.


