சென்னை: அக்டோபர் 1ஆம் தேதி வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மீதானமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாயப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா, குமாரி கடல் பகுதிகளில் 60கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்ட என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தென்காசி, கோவை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடலில் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45முதல் 55கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் மத்திய தெற்கு வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே இடையே 60கிலோ மீட்டர் வேகத்திலும் வீசப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.