மதுரை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு எதிராக வேண்டுமென்றே அதிமுக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் வில்சன் வாதமிட்டார். ஆதார் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக திட்டமிட்டு அதிமுகவினர் வழக்கு தாக்கல் செய்த நிலையில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு ஆதார் விவரங்களை வாங்கவில்லை என பி.வில்சன் தெரிவித்தார். இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் மனு குறித்து பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆக.21க்கு ஒத்திவைத்தது.
+
Advertisement