தமிழ்நாடு குறித்து உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் ஆளுநர் ரவி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாடு குறித்து உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஆளுநர் ரவி முன்வைக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். மாநிலத்தின் ஒற்றுமையையும் சமூக அமைதியையும் பாதிக்கக் கூடிய வகையில் ஆளுநர் பேசி வருகிறார். தமிழ்நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆளுநர் அரசியல் உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என தெரிவித்தார்.


