Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு காங். சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வயநாடு அனுப்பிவைப்பு: செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழ்நாடு காங். சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வயநாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 385-ஆக அதிகரித்துள்ளது. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 7வது நாளாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம், தன்னார்வலர்கள் உள்பட 1500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காங். சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் செல்வப்பெருந்தகை வயநாட்டிற்கு அனுப்பி வைத்தார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எம்.எச் அசன் மௌலானா ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனத்தை இன்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.