Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே வரும் பிறப்பு விகிதம்: சமூக, பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால் சமூகம், பொருளாதாரம், அரசியல் மருத்துவ ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக வள்ளுவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது என்று ஐநா சபை, உலக வாங்கி, இந்தியா சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் வடமாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி தேசிய சராசரியா விட அதிகமாக உள்ளது. அதே நேரம் தென் மாநிலங்கள் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருப்பதாக தெரியவந்துள்ளது.

குழந்தைகளை பிறப்பு விகிதம் குறைந்ததே இதற்கு முக்கியம் காரணமாக பார்க்கப்படுகிறது. குழந்தை பிறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1.40 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதம் காரணமாக நீண்ட காலத்தில் சமூக, மருத்துவ, அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர் அமலுருபுவனத்தான் கூறுகிறார். தமிழாக அரசின் பொது சுகாதாரத்துறை பிறப்பு, இறப்பு பதிவு இணையதளத்தின் உள்ள புள்ளி விவரங்களின்படி 2020-ல் 4,76,054 ஆண்கள், 4,48,171 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 9,24,256 பேர் பிறந்து இருக்கிறார்கள். கடந்த 2021-ல் மொத்தம் 9,12,869 பெரும், 2022-ல் மொத்தம் 9,36,361 பெரும், 2023-ல் மொத்தம் 9,02,329 பெரும், 2024-ல் மொத்தம் 8,47,668 பேர் பிறந்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கொரோன ஊரடங்கு காரணமாக 2022-ல் மட்டும் கூடுதலாக பிறப்பு விகிதாம் இருந்துள்ளது. 2023-ல் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு 54,661 குழைந்தைகள் குறைவாக பிறந்துள்ளனர். கல்வி மற்றும் பொருளாதாரம் ரீதியாக வளர்ந்துள்ள மாநிலத்தில் பிறப்பு விகிதகம் குறைந்து இருப்பதை பொதுவெளியில் பேசும் பொருளாக எடுத்து சென்று மாற்றுவதுநாள் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று வள்ளுவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.