தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதுரை அரிட்டாபட்டி, திண்டுக்கல் காசம்பட்டி வீரா கோவில், ஈரோடு எலத்தூர் ஏரி பல்லுயிர் தலமாக உள்ளன. 32.28 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நாகமலை குன்றில் உள்ள காட்டுப்பகுதியில் 135 வகை பறவைகள் உள்ளன. 138 தாவர இனங்கள், 106 பூச்சிகள், 17 ஊர்வனங்கள், 10 பாலூட்டிகள் என மொத்தம் 437 உயிரினங்கள் வாழ்கின்றன.