சென்னை: தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் ஆணையர் அலுவலக கட்டிட வாடகையை ரூ.6 லட்சத்திலிருந்து இருந்து ரூ.13 லட்சமாக அதிகரித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கூடுதல் தொகை ரூ.2.18 கோடி 2025 டிசம்பர் 31ம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டது. அலுவலகத்தை காலி செய்து கட்டடத்தை ஒப்படைக்கக் கோரி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
+
Advertisement