தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில் குளித்த சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தாம்பரம் மாநகராட்சியில் சிட்லப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக 86.86 ஏக்கராக இருந்த ஏரி காலப்போக்கில் தற்போது 46.88 ஏக்கராக உள்ளது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஏரியின் மூலமாக சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. ஆனால், அதன் பிறகு ஏரியைச் சுற்றிலும் தொடர்ந்து குடியிருப்புகள் அதிகரித்து வந்ததால் விவசாயம் கைவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த ஏரிக்குள் இரண்டு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர், நீச்சல் தெரியாமல் தண்ணீர் மூழ்கி இறந்தனரான என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.