புதுடெல்லி: தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் வௌிநாடுகளுக்கு பயணம் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வௌியேறிய பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். ஒன்றிய வௌியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த மே 15ம் தேதி தலிபான் வௌியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
அவரை இந்தியா வரும்படி ஒன்றிய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதற்காக முத்தகியின் இந்திய பயணத்துக்கு விலக்கு அளிக்கும்படி ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தலிபான் அமைச்சர் முத்தகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.