டெல்லி: கடுமையான தடைகளை தாண்டி ஆப்கானிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்துள்ளார். அமீர்கான் முட்டாக்கிக்கு ஐநா தடைவிதித்துள்ள நிலையில், அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. இந்நிலையில் முட்டாக்கிகாக ஐநாவிடம் இந்தியா பேசியதன் பலனாக அவருக்கு தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டது. இப்பயணத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தேசிய பாதுகாப்பது ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அமீர்கான் முட்டாக்கி சந்திக்க உள்ளார்.
பாகிஸ்தான் உடனான மோதல் போக்கு நீடிக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் உதவி இந்தியாவுக்கு அவசியம் ஆகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள பகரம் விமானப்படை தளத்தை மீட்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி செய்கிறார். இதனால் சீனா மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பாதுகாப்பது அபாயம் ஏற்படும் இச்சுழலில் கடுமையான முயற்சிகளுக்கு இடையே ஆப்கானிஸ்தான் அமைச்சரை வரவழைத்து அவருடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு தங்கள் மண்ணில் ஆப்கானிஸ்தான் இடம் தர கூடாது என்று இந்தியா வலியுறுத்தும் என தெரிகிறது. தலிபான்கள் ஆப்கனிஸ்தானை ஆண்டு வரும் நிலையில் அவர்களின் அரசுக்கு ரஷ்யா மட்டுமேஅங்கீகாரம் வழங்கி உள்ளது. தாலிபான்களுடன் இந்தியா இணக்கமாக உள்ள போதும் அவர்களுக்கு அங்கீகாரம் தரவில்லை.