Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

3வது டி20யில் நியூசியை வீழ்த்திய ஆஸி

மவுன்ட் மவுன்கனுய்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில் நேற்று ஆடியது. முதலில் களமிறங்கிய நியூசி. 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸி, 18 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ஆஸி அணியின் மிட்செல் மார்ஷ் 52 பந்துகளில் 7 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 103 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகனாகவும் அவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து, 2-0 என்ற கணக்கில் ஆஸி தொடரை கைப்பற்றியது.