கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா இடையிலான 3வது டி20 போட்டி, ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய வெ.இ 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது. ஹோப் 102 ரன் எடுத்தார். அதையடுத்து 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் ஆஸி ஆடத் தொடங்கியது.
துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் டிம் டேவிட், மிட்செல் ஓவன் அதிரடி காட்டி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். அதனால், ஆஸி, 16.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிம் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 11 சிக்சர்கள் விளாசி 102 ரன் எடுத்து சாதனை படைத்தார். இந்த வெற்றியை சேர்த்து, 3-0 என்ற கணக்கில், ஆஸி ஹாட்ரிக் சாதனை செய்தது.