4வது டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
4வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலியா 18.2 ஓவர்களில் 119 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 46, அபிஷேக் சர்மா 28 ரன்கள் எடுத்தனர்.
