ஜிஸ்டாட்: சுவிஸ் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சுவிட்சர்லாந்தின் ஜிஸ்டாட் நகரில் சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடி வரும் அலெக்சாண்டர் ஸ்டானிஸ்லோவிச் புப்லிக், அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேன்யுவல் செருண்டோலோ உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் செட்டை, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் புப்லிக் கைப்பற்றினார். 2வது செட்டை, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ஜுவான் வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, புப்லிக் ஆக்ரோஷமாக ஆடி, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்ற புப்லிக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.