ஜிஸ்டாட்: சுவிட்சர்லாந்தின் ஜிஸ்டாட் நகரில் சுவிஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த கால் இறுதிப் போட்டியில், நார்வே வீரர் கேஸ்பர் ரூடை, அர்ஜென்டினா வீரர் ஜுவான் மேன்யுவல் செருண்டோலோ வென்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் அர்ஜென்டினா வீரர் ரோமன் ஆண்ட்ரெஸ் புருசாகாவை, பெரு வீரர் இக்னேஷியோ பூஸ் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் ஜுவான் மேன்யுவல் செருண்டோலோ, இக்னேஷியோ பூஸ் மோதினர். துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய ஜூவான் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார். 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ஜுவான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவரை, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் ஜுவான் எதிர்கொள்வார்.