சென்னை: தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார். கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
+
Advertisement