Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

`ஸ்வயம் பிளஸ்’ திட்டத்தின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ படிப்புகள்

சென்னை: ‘ஸ்​வ​யம் பிளஸ்’ திட்​டத்​தின் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்​களுக்​கும் இலவச​மாக ஏஐ படிப்​பு​கள் வழங்​கப்பட உள்ள​தாக சென்னை ஐஐடி அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை ஐஐடி​யில் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: இந்​தியா முழு​வதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்​களுக்கு ‘அனை​வருக்​கும் செயற்கை நுண்​ணறிவு (AI)’ படிப்​பு​களை சென்னை ஐஐடி விரிவுபடுத்​துகிறது. இந்த படிப்​பு​கள் சென்னை ஐஐடி பிர​வர்​தக் டெக்​னால ஜிஸ் அறக்​கட்டளை​யுடன் இணைந்து ஸ்வ​யம் பிளஸ் மூலம் ஆன்​லைன் முறை​யில் வழங்கப்​படு​கின்​றன.

முன்​னர் வழங்​கப்​பட்ட 5 படிப்​பு​களு​டன், ஆசிரியர்​களுக்​கான ஒரு புதிய பாடத்​திட்​டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்​தம் 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்​தப் படிப்​பு, இலவச​மாக வழங்​கப்​படு​கிறது. சான்​றிதழ் பெற விரும்​புவோர், தேர்​வு​கள் மூலம் குறைந்த கட்​ட​ணத்​தில் பெறலாம். கற்​பித்​தல், மதிப்​பீடு மற்​றும் மாணவர் ஈடு​பாட்டை மேம்​படுத்​து​வதற்கு அத்​தி​யா​வசி​ய​மான செயற்கை நுண்​ணறிவு மற்​றும் நடை​முறை கருவி​களைப் பெற ஆர்​வ​முள்ள ஆசிரியர்​கள் விண்​ணப்​பிக்​கலாம்.

இந்​தப் படிப்​பு​கள், செயற்கை நுண்​ணறிவு கல்​வியை உள்​ளடக்​கிய​தாக​வும், அனைத்​துத் துறை​களி​லும் அணுகக் கூடிய​தாக​வும் அமைந்​திருக்​கும். இவை பொறி​யியல் மாணவர்​களுக்கு மட்​டுமல்​லாமல், கலை, அறி​வியல், வணி​கம் மற்​றும் பிற துறை​களைச் சேர்ந்த கற்​பவர்​களுக்​காக​வும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. புதிய செயற்கை நுண்​ணறிவு பாடத்​ திட்​டத்​தை, ஐஐடி இயக்​குநர் காமகோடி கடந்த திங்​கள்​கிழமை தொடங்கி வைத்​தார். இதில் சேர விரும்​புவோர் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதள இணைப்பை பயன்​படுத்தி அக்​டோபர் 10ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். இவ்வாறு அதில்​ கூறப்பட்டுள்​ளது.