சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி இறந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை கண்ணகி நகரில் பணிக்கு செல்லும்போது மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார். வரலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர்; தூய்மை பணியாளர் வரலட்சுமி குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும். தூய்மை பணியாளர் வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும். வரலட்சுமியின் கணவர் ரவி உடல்நலம் குன்றியிருப்பதால் அவருக்கான முழு மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் உறுதி அளித்தார்.