ஜிஎஸ்டிக்கு பிறகு சுசூகி ஹயபுசா மோட்டார் சைக்கிளின் விலை அதிகரித்துள்ளது. சுசூகி நிறுவனத்தின் ஹயபுசா மோட்டார் சைக்கிள் கடந்த நிதியாண்டில் 1,000 - 1,600 சிசி இன்ஜின் திறன் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிளாக இருந்தது. இதன் ஷோரூம் விலை ரூ.16.9 லட்சம். தற்போது ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்குப் பிறகு இதன் விலை ரூ.1.16 லட்சம் அதிகரித்து ரூ.18.06 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுபோல் இந்த நிறுவனத்தின் வி-ஸ்டோர்ம் 800 டிசி மோட்டார் சைக்கிள் விலை ரூ.10.3 லட்சத்தில் இருந்து ரூ.71,000 அதிகரித்து ரூ.11.01 லட்சமாகவும், ஜிஎஸ்எக்ஸ்-8ஆர் ரூ.9.25 லட்சத்தில் இருந்து ரூ.64,000 அதிகரித்து ரூ.9.89 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் 350 சிசிக்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் மீதான வரி 40 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement
