இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை விமர்சித்த அமித்ஷாவிற்கு நீதிபதிகள் கண்டனம்
டெல்லி : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து முன்னாள் நீதிபதிகள் 18 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அமித் ஷாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 18 பேர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என அமித் ஷா விமர்சித்திருந்தார். அமித் ஷாவின் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு எதிரானது என்று முன்னாள் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.