டெக்சாஸ்: இன்டர் மியாமி அணிக்காக ஆடி வரும் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, சக அணி வீரர் ஜோர்டி ஆல்பா ஆகிய இருவரும், எம்எல்எஸ் ஆல் ஸ்டார்ஸ் அணியில் இடம் பெறும் வகையில் கால்பந்து ரசிகர்கள் வாக்குகள் அளித்திருந்தனர்.
ஆனால், லிகா எம்எக்ஸ் ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக, 23ம் தேதி நடந்த போட்டியில் எம்எல்எஸ் ஆல் ஸ்டார்ஸ் அணிக்காக, மெஸ்ஸி, ஆல்பா ஆட வரவில்லை. அதற்கு தண்டனையாக இருவருக்கும் அடுத்த ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மெஸ்ஸி அப்செட் ஆக உள்ளதாகவும், இன்டர் மியாமி அணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.